மாணவர்களுக்கு இன்று கலைத்திருவிழா துவக்கம்
கோவை : பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கலைத்திருவிழா இன்று துவங்குகிறது.தமிழகத்தில் அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் நடனம்,ஓவியம் உள்ளிட்ட கலைத் திறன்களை வெளிகாட்டும் விதமாக கலைத் திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.பள்ளி, ஒன்றியம் அளவில் கலைத்திருவிழா போட்டிகள் முடிவடைந்த நிலையில், மாவட்ட அளவிலான போட்டிகள் இன்று துவங்குகிறது.சிங்காநல்லுார், கே.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரியில் வரும்,15ம் தேதி வரை போட்டிகள் இடம்பெறுகின்றன. இன்று, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும், நாளை, 9 மற்றும், 10ம் வகுப்புக்கும், நாளை மறுதினம் பிளஸ்1, பிளஸ் 2 மாணவர்களுக்கும் போட்டிகள் நடக்கும் என, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.