உள்ளூர் செய்திகள்

கேந்திரிய வித்யாலயாவில் ஆசிரியர் பணி வாய்ப்பு

சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகளில், ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடக்க உள்ளது.தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் இப்பள்ளிகளில், மத்திய அரசு பணியாளர்களின் குழந்தைகள் அதிகம் சேர்க்கப்படுகின்றனர்.பல்வேறு மாநிலங்களில், போதிய அளவு பள்ளிகள் இல்லாததால், இளம் வயதினர் பயங்கரவாதிகளின் பிடியில் செல்கின்றனர். அவ்வாறான 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், புதிதாக, 57 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நிறுவ மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. புதிதாக திறக்கப்பட உள்ள பள்ளிகளுக்கு, தகுதியான ஆசிரியர்களை நியமிக்க வேண்டி உள்ளது.மேலும், ஏற்கனவே செயல்படும் கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளில் பணியாற்றும் பெரும்பாலான நிரந்தர ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளதாலும், ஓய்வு பெற உள்ளதாலும், புதிதாக ஆசிரியர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.எனவே, பல்வேறு நிலை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு, இன்று முதல் டிச., 4 வரை, https://www.cbse.gov.in/, httips://kvsangathan.nic.in/, https://navodaya.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம். பணியிட விபரங்கள் இன்று வெளியிடப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்