உள்ளூர் செய்திகள்

ஸ்பெயின் குழந்தைகளுக்கு சமூக ஊடக தடை

மார்ரிட்: ஸ்பெயினில் 16 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் சட்டம் விரைவில் கொண்டு வரப்பட இருக்கிறது. குழந்தைகள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ், உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிகம் மூழ்கி கிடப்பதால், உடல், மன ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இதையடுத்து, குழந்தைகள் சமூக ஊடக தளங்களை பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயதை நிர்ணயிக்கும் முடிவு ஐரோப்பா முழுவதும் தீவிரமடைந்துள்ளது. ஏற்கனவே, பிரான்ஸ், ஜென்மார்க் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் இந்த நடவடிக்கையை தொடங்கியுள்ளன. இதைத்தொடர்ந்து ஸ்பெயினும் குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்