உள்ளூர் செய்திகள்

கட்டாய வினா கஷ்டம்: மாணவர்கள் புலம்பல்

திருப்பூர்: பிளஸ் 2 பொருளியல் தேர்வில், கட்டாய வினாவும், இயற்பியல் தேர்வில் ஐந்து மதிப்பெண், கட்டாய வினாவும் கஷ்டமாக இருந்ததாக மாணவ, மாணவியர் கருத்து தெரிவித்தனர்.நேற்று நடந்த பிளஸ் 2 இயற்பியல் தேர்வில், 68 பேரும், பொருளியலில், 162 பேரும் பங்கேற்கவில்லை. வேலைவாய்ப்பு சார்ந்த படிப்புக்கான தேர்வில், 426 பங்கேற்று தேர்வெழுதினர். 5ம் தேதி மொழித்தாள் தேர்வுகள் முடிந்து, 9ம் தேதி முதல் முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் நடந்து வருகிறது. 26ம் தேதியுடன் தேர்வுகள் முடிவடைகிறது.பொருளியல் தேர்வு குறித்து மாணவர்கள் கூறியதாவது:தர்ஷன்: ஒரு மதிப்பெண் வினாக்கள் எளிமையாக இருந்தது. ஐந்து மதிப்பெண் வினாக்கள் யோசித்து விடையெழுதும் வகையில் இருந்தது. ஐந்து மதிப்பெண்ணில், 14 கேள்விகள், ஏழு எழுத வேண்டும்; ஐந்து மட்டுமே எழுத முடிந்தது. மூன்று மதிப்பெண்ணில் கட்டாய வினா கஷ்டமாக இருந்தது.யோகேஸ்வரி: ஒரு மதிப்பெண்ணில் மூன்று வினாக்கள் பாடங்களுக்குள் இருந்து கேட்கப்பட்டிருந்தது; யோசிக்க வேண்டி இருந்தது. ஐந்து மதிப்பெண்ணுக்கு எளிதில் விடை எழுதினேன்; முழு மதிப்பெண் பெற முடியும். கட்டாய வினா இதுவரை கேட்கப்படாத வினாவாக இருந்தது.பொருளியல் ஆசிரியர்கள் கூறுகையில், “கட்டாய வினா கடினமாக இருந்ததால், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெறுவோரின் எண்ணிக்கை சற்று குறையலாம். நன்கு படித்திருந்தால், ஐந்து மதிப்பெண்ணுக்கு விடையளித்திருக்க முடியும். பொருளியலில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும் வகையில் வினாத்தாள் இருந்தது,” என்றனர்.இயற்பியல் தேர்வு குறித்து மாணவர்கள் கூறியதாவது:அப்சல்: ஐந்து மதிப்பெண் வினாக்களில் நான்குக்கு முழுமையாக விடையளிக்க முடிந்தது; மூன்று கேள்விகள் யோசிக்க வைத்தது. இரண்டு மதிப்பெண், ஒரு மதிப்பெண் ஈஸி. மூன்று மதிப்பெண் கட்டாய வினா கடினம். கட்டுரை வடிவிலான கேள்வி சற்று கடினமாக இருந்தது.ஆனந்தராம்: மூன்று மதிப்பெண்ணில் ஒன்பது கேள்விகளில், ஆறு எழுத வேண்டும். நான்கு மட்டுமே முழுமையாக எழுத முடிந்தது. படித்துச் சென்று வினாக்கள் இரண்டு மதிப்பெண்ணில் வந்திருந்தது. ஐந்து மதிப்பெண்ணில் எதிர்பாராத கேள்விகள் வந்திருந்தது; கட்டாய வினா இது வரை வராத கேள்வி.இயற்பியல் ஆசிரியர்கள் கூறுகையில், “கட்டாய வினா பாடத்துக்குள் இருந்து கேட்கப்பட்டதால், சற்று யோசித்து விடையளிக்க வேண்டி இருக்கும். முழுமையாக படித்திருந்தவர்கள் ஐந்து மதிப்பெண் கேள்விகளுக்கு விடையளித்திருக்க முடியும். ஒன்று, இரண்டு மதிப்பெண் கேள்விகள் அனைத்து எளிமை என்பதால், தேர்ச்சி சதவீதம் பாதிக்காது,” என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்