உள்ளூர் செய்திகள்

ஜெய் சாரதா பள்ளியில் பட்டமளிப்பு விழா

திருப்பூர்: திருப்பூர், வேலம்பாளையம் ஜெய் சாரதா மெட்ரிக் பள்ளியில் மழலையர் பிரிவு (யு.கே.ஜி.,) மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. பள்ளி தாளர் வேலுசாமி தலைமையில் நடந்தது.அறக்கட்டளை செயலாளர் கீர்த்திகா வாணி மற்றும் பள்ளி பொருளாளர் சுருதி ஹரிஷ் முன்னிலை வகித்தனர். மழலையர் பிரிவு மாணவர்களின் இறைவணக்க பாடலோடு துவங்கிய நிகழ்வு, பட்டிமன்றம், நடனம், பேச்சு, பாடல் முதலிய கலை நிகழ்ச்சிகளை மாணவர்கள் அற்புதமாக நிகழ்த்தி காட்டிரன். மழலையர் பிரிவு மாணவி ஆலிபா, 50 திருக்குறள் ஒப்புவித்து அசத்தினர். முன்னதாக, பள்ளி தாளர், அறக்கட்டளை செயலாளர், பொருளாளர் ஆகியோர் பட்டம் பெறும் மாணவர்களை வாழ்த்தி, சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்