உள்ளூர் செய்திகள்

சிறுவர்களுக்கான கோடை நீச்சல் பயிற்சி முகாம்

சென்னை: முகலிவாக்கத்தில் துவங்கியுள்ள கோடை கால நீச்சல் பயிற்சி முகாமில், சிறுவர்கள் உற்சாகத்துடன் பயிற்சி பெற்று வருகின்றனர்.முகலிவாக்கம் 'பிரண்ட்ஸ் ஸ்போர்ட்ஸ்' அகாடமி சார்பில், கோடை கால சிறப்பு நீச்சல் பயிற்சி முகாம் துவங்கப்பட்டுள்ளது. முகாமில், 4 வயது முதல் சிறுவர், சிறுமியர் வரை அனைவரும் பங்கேற்கலாம்.ஆரம்ப நிலையிலேயே மாணவர்களுக்கு தண்ணீரின் மீது உள்ள பயத்தை நீக்குதல், சரியான சுவாச கட்டுப்பாடு, அடிப்படை மற்றும் மேம்பட்ட நீச்சல் நுட்பங்கள் போன்றவை முறையாக கற்றுத் தரப்படுகின்றன.கோடை காலத்தை பயனுள்ளதாக மாற்றும் வகையில், காலை மற்றும் மாலை நேரங்களில் தனித்தனியாக பயிற்சி வழங்கப்படுகிறது.இந்த பயிற்சி முகாமில் சேர, 94441 62040 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்