இ.ஆர்.கே., கல்லுாரியில் சாதனையாளர் தின விழா
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த எருமியாம்பட்டியில் உள்ள இ.ஆர்.கே., கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சாதனையாளர் தின விழா கல்லூரி கலையரங்கில் கொண்டாடப்பட்டது.விழாவை இ.ஆர்.கே., கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் செயலாளர் செல்வராஜ் தொடங்கி வைத்தார். நிர்வாக இயக்குனர் சோழவேந்தன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் சக்தி தலைமை வகித்தார். ஆங்கிலத்துறை மாணவி வித்யா அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து, பெரியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சி குழு உறுப்பினர் முனைவர் சிவக்குமார் பேசினார்.மருந்தியல் கல்லுாரி முதல்வர் ஆனந்தகுமார், முதன்மை பொறுப்பாளர் சிவகுமார், நிர்வாக அலுவலர் அருள்குமார், அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், 800க்கும் மேற்பட்ட மாணவியர் கலந்து கொண்டனர். விழாவில் குருதி தானம் வழங்கிய மாணவியர் மற்றும் மதிப்பு கூட்டு வகுப்பில் பயிற்சி பெற்ற மாணவியருக்கு, சான்றிதழ் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது. பெரியார் பல்கலைக்கழக தேர்வில் தரவரிசை பட்டியலில் முதலிடம் முதல், பத்தாம் இடம் வரை பிடித்த மாணவியருக்கு ரொக்கம் மற்றும் நினைவு பரிசுகளை, இ.ஆர்.கே., கல்வி அறக்கட்டளை சார்பாக வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.