உள்ளூர் செய்திகள்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சேர ஆவணங்கள் தயாரா?

தமிழகத்தில், இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான 2026-2027 கல்வியாண்டு மாணவர் சேர்க்கை அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. கலந்தாய்வு வாயிலாக நடைபெற உள்ள மாணவர் சேர்க்கைக்கு தேவையான ஆவணங்களை மாணவர்கள் முன்கூட்டியே தயார் செய்து வைத்துக்கொள்வது சிறந்தது.இட ஒதுக்கீடு:* அரசு மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மாநில ஒதுக்கீட்டு இடங்கள்* சுயநிதி மற்றும் மாநில தனியார் பல்கலைக்கழக மருத்துவ / பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள்* அதே கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள்* வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டு இடங்கள்தேவையான ஆவணங்கள்:* நீட் யு.ஜி,, - 2026 அனுமதி அட்டை* 10ம், 11ம் மற்றும் 12ம் வகுப்பு அதற்கு இணையான தேர்வு மதிப்பெண் சான்றிதழ்* 12ம் வகுப்பு அல்லது இணையான படிப்பு முடித்த பின் பெறப்பட்ட மாற்று சான்றிதழ் * 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் படித்ததற்கான சான்று (தமிழ்நாடு பூர்வீகம் அல்லாதவர்களுக்கு பொருந்தும்)* சாதி சான்றிதழ் (தேவைப்பட்டால்)* பிறப்பிடச் சான்றிதழ் (தேவைப்பட்டால்)* தமிழ்நாடு பூர்வீகம் அடிப்படையில் இடஒதுக்கீடு கோருபவர்களது பெற்றோரில், ஒருவரின் சாதி சான்றிதழ் * கட்டண விலக்கு கோரும் மாணவர்களது பெற்றோரின் வருமான சான்றிதழ்* பிற மாநில வாரியங்கள்/பல்கலைக்கழகங்களில் படித்தவர்கள் சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் தகுதிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.நிர்வாக ஒதுக்கீடு சிறுபான்மையினர் பிரிவு: மொழி / மத சிறுபான்மையினர் சான்றிதழ்நிர்வாக ஒதுக்கீடு வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவு:* நிதி ஆதரவாளரது வெளிநாடு வாழ் இந்தியர் அந்தஸ்தை உறுதி செய்யும் சான்று (சம்பந்தப்பட்ட நாட்டிலுள்ள இந்திய தூதரக முத்திரையுடன்) அல்லது 04.03.2021க்கு முன் வழங்கப்பட்ட ஓ.சி.ஐ., அட்டை* நிதி ஆதரவாளர் மற்றும் மாணவரது உறவு சான்றிதழ் (வருவாய் துறை அதிகாரியால் வழங்கப்பட்டது) மற்றும் ஆதரவாளரின் செல்லுபடியாகும் இந்திய பாஸ்போர்ட்* என்.ஆர்.இ., வங்கி கணக்கு விவர நகல்அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு:* 2022-2023க்கு முன் 12ம் வகுப்பு முடித்தவர்கள், 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்றதற்கான (Bonafide) சான்றிதழ் (மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வழங்கியது)* 2022-2023 அல்லது அதற்கு பிந்தைய கல்வியாண்டில் முடித்தவர்கள் தனி சான்றிதழ் தேவையில்லை.விபரங்களுக்கு: https://tnmedicalselection.net


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்