உள்ளூர் செய்திகள்

கேட் மதிப்பெண் அடிப்படையில் எம்.டெக்., சேர்க்கை

சென்னை: டில்லி பல்கலையில், முதல் முறையாக, 'கேட்' தகுதி மதிப்பெண் அடிப்படையில், எம்.டெக்., மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.டில்லி பல்கலையில், எம்.டெக்., மைக்ரோவேவ் மற்றும் கம்யூனிகேஷன் படிப்புக்கான சேர்க்கை, இது வரை முதுநிலை 'க்யூட்' நுழைவுத் தேர்வு அடிப்படையில் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு முதல் முறையாக, 'கேட்' தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடத்த, பல்கலை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.'கேட்' மதிப்பெண் அடிப்படையிலான சேர்க்கை, முதன்மை தேர்வாக இருந்தாலும், காலியாக உள்ள மீதமுள்ள இடங்களுக்கான சேர்க்கை, முதுநிலை 'க்யூட்' நுழைவுத் தேர்வு அடிப்படையில் நடத்தப்படும் என, டில்லி பல்கலை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்