உள்ளூர் செய்திகள்

அரசு ஐ.டி.ஐ.,யில் சேர மாணவர்களுக்கு அழைப்பு

கடலூர்: அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.சிதம்பரம், சுவாமி சகஜானந்தா அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில், எஸ்.சி., எஸ்.டி., பிரிவை சேர்ந்த 8ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.இதர பிரிவினருக்கும் சில இடங்கள் உள்ளன. விண்ணப்பிக்க விரும்புவோர் நேரடியாக தொழிற்பயிற்சி நிலையம் சென்று, அங்குள்ள உதவி மையத்தின் மூலமாக சேவை கட்டணமில்லாமல் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பம் பதிவு செய்ய வரும் ஜூன், 3ம் தேதி கடைசி நாள். நேரில் வர இயலாதவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு 04144- 294474; 949905 5866 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.மாணவ மாணவியர் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர்ந்து, வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்