உள்ளூர் செய்திகள்

ஐ.டி.ஐ., மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க அழைப்பு

சென்னை: 'கிண்டி ஐ.டி.ஐ.,யில் நடப்பாண்டிற்கான மாணவ மாணவியர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்' என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:கிண்டி, அரசு தொழிற்பயிற்சி நிலையமான ஐ.டி.ஐ.,யில், நடப்பாண்டு மாணவ மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இங்கு, புதிதாக தொடங்கப்பட்டுள்ள இண்டஸ்ட்ரி - 4.0 தரத்தில், ஐந்து தொழிற் பிரிவுகளில், பயிற்சி அளிக்கப்படுகிறது.இப்பயிற்சிக்கு கட்டணம் கிடையாது. பயிற்சிக்கான தகுதி, 8ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்கள், 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது.பயிற்சியில் சேர விரும்புவோர் ஜூன் 3ம் தேதிக்குள், உரிய சான்றிதழ்களுடன், கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடியாகவோ அல்லது www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.மேலும் விபரங்களுக்கு, 044 2250 1350 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்