உள்ளூர் செய்திகள்

டிரம்ப் போட்டோவுடன் வெளியானது புதிய பாஸ்போர்ட்!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் தமது புகைப்படத்துடன் கூடிய புதிய பாஸ்போர்ட்டை வெளியிட்டு உள்ளார்.அமெரிக்கா சுதந்திரம் பெற்று 250 ஆண்டுகள் பூர்த்தி அடைந்ததை போற்றும் வகையில் புதிய பாஸ்போர்ட் விரைவில் வெளியிடப்படும் என்று டிரம்ப் அண்மையில் அறிவித்து இருந்தார்.அதன்படி தமது போட்டோவுடன் கூடிய பிரத்யேகமான பாஸ்போர்ட்டை வெளியிட்டு இருக்கிறார். இந்த விவரத்தை அவர் தமது ட்ரூத் சோஷியல் பதிவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.டிரம்ப் வெளியிட்டுள்ள பாஸ்போர்ட் முகப்பில் United States Of America என்ற வார்த்தைகள் பெரிய அளவில் தங்க நிற எழுத்துகளில் பொறிக்கப்பட்டு உள்ளது. பின் பக்கத்தில் அந்நாட்டு தேசியக்கொடியுடன் நட்சத்திரங்கள் வரையப்பட்டு இருக்க, 250 என்ற எண் அச்சிடப்பட்டு உள்ளது.இந்த 250 என்பது அந்நாட்டின் 250வது சுதந்திர தின ஆண்டு விழாவை குறிப்பிடும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. பாஸ்போர்ட் உள்பக்கத்தில் டிரம்ப் உருவப்படம் இடம் பெற்றுள்ளது. அதில் அவரின் தங்க வண்ண கையெழுத்து போடப்பட்டு உள்ளது.டிரம்ப் தமது மேசையில் இரு கைகளை ஊன்றி, எதிரில் இருப்பவர்களை உற்றுநோக்கும் வகையிலான போட்டோவும் இடம்பெற்றுள்ளது.டிரம்ப் படத்தின் நேர் எதிர்பக்கத்தில் அமெரிக்க நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர பிரகடனம் கையெழுத்திடப்பட்ட புகைப்படம் அச்சிடப்பட்டு இருக்கிறது.இந்த பிரத்யேக பாஸ்போர்ட் வாஷிங்டனில் நேரடியாக விண்ணப்பிக்கும் நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். ஜூலை 4ம் தேதி அமெரிக்காவின் சுதந்திர தினம். அதையொட்டி இந்த பாஸ்போர்ட்டுகள் வினியோகிக்கப்பட உள்ளன.அமெரிக்காவின் வரலாற்றில் அதுவும் பயண ஆவணம் ஒன்றில் ஒரு அதிபரின் புகைப்படம் நேரிடையாக இடம்பெற்று இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்