உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர்களை கண்டறிய உத்தரவு
சென்னை: “பள்ளி வகுப்பை முடித்து, உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர்களை கண்டறிந்து, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்,” என, சென்னை கலெக்டர் மாலதி ஹெலன் உத்தரவிட்டார்.பாரிமுனை, ராஜாஜி சாலையில் உள்ள சென்னை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, கலெக்டர் மாலதி ஹெலன் தலைமை வகித்தார்.கூட்டத்தில், அவர் கூறியதாவது:பள்ளி மேலா ண்மை குழு மூலம் இயற்றப்பட்ட தீர்மானங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி வகுப்பை முடித்து, உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர்களின் நிலைமையை, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.