உள்ளூர் செய்திகள்

கணக்குகளை எழுதி மாணவர் சாதனை பதிவு

பொள்ளாச்சி: சோழா உலக சாதனை புத்தக நிகழ்வு, பொள்ளாச்சி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில், ஏழாம் வகுப்பு மாணவர் இளங்காமணி, மூன்று இலக்க வாய்ப்பாடுகள், 10 மற்றும் நான்கு எண்களை மூன்று எண்களால் பெருக்கும் பத்து கணக்குகளுக்கு, 12 நிமிடங்களில் விடையளித்து சாதனை நிகழ்த்தினார்.பள்ளி முதல்வர் பத்மபிரியா முன்னிலை வகித்தார். சாதனை புத்தக நிறுவன நிறுவனர் நீலமேகம், சாதனை நிகழ்வை கண்காணித்தார். சிலம்ப பயிற்சியாளர் ஜெகதீஸ்வரன் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.சாதனை புத்தக நிறுவன நிறுவனர் கூறுகையில், 'மதுரையை சேர்ந்த ராஜூ, நர்த்தனா தம்பதியினர் மகன் இளங்காமணி, 10 நிமிடம், 57 வினாடியில் கணக்குகளை முடித்தவுடன், 2025-2026ம் ஆண்டு பிறந்தவர்களின், பிறந்தநாள், மாதம் சொன்னால் அவர் பிறந்த கிழமையை சொல்லி அசத்தி சோழா உலக சாதனை படைத்துள்ளார். மாணவருக்கு பாராட்டு சாதனை விருது வழங்கப்பட்டது,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்