போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
உடுமலை: சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.தமிழகம் முழுவதும் பள்ளிகளில், போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. அவ்வகையில், குடிமங்கலம் ஒன்றியம், சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் (பொ) ஆலிஸ்திலகவதி வரவேற்றார்.குடிமங்கலம் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி பேசுகையில், “போதை பொருள் பயன்படுத்தும் நபரால் அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாது, சமுதாயமும் பாதிக்கிறது. பல வகையான போதை பொருட்களை பயன்படுத்துபவர்களால் குற்றங்கள் அதிகரிக்கிறது. இளைய தலைமுறையினர் போதைப் பொருட்களை பயன்படுத்தக்கூடாது; அப்பொருட்கள் பயன்பாட்டை தடுப்பதிலும், மாணவ, மாணவியரின் பங்களிப்பு இருக்க வேண்டும்,” என்றார்.தொடர்ந்து எஸ்.ஐ., சண்முகம் பேசினார். வட்டார வள மேற்பார்வையாளர் (பொ) சுமதி, ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.