உள்ளூர் செய்திகள்

அம்பத்துார் ஐ.டி.ஐ.,யில் புதுமை முயற்சி மையம்

சென்னை: தமிழக அரசுக்கு சொந்தமாக, 132 ஐ.டி.ஐ., எனப்படும் தொழில் பயிற்சி நிலையங்களும், 272 தனியார் ஐ.டி.ஐ.,களும் உள்ளன. அவற்றில் படிக்கும் மாணவர்களுக்கு வழக்கமான பாடத் திட்டங்களுடன், உயர் திறன் வேலைவாய்பை உருவாக்க, அரசு முடிவு செய்துள்ளது.இதற்காக, தமிழக உலகளாவிய புதுமை முயற்சிகள் மற்றும் திறன் பயிற்சி மையத்தை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அமைக்க உள்ளது. சென்னை அம்பத்துாரில் ஐ.டி.ஐ., வளாகத்தில், இது அமைக்கப்படுகிறது. இதற்கான திட்ட செலவு, 105 கோடி ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்