வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையம் இடமாற்றம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் தற்போது மாடூர் டோல்பிளாசா அருகில் இடமாற்றம் செய்யப்படுகிறது.இது குறித்து கலெக்டர் பத்மஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி நேப்பால் தெருவில் தனியார் வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், போதிய இடவசதி இல்லாததால், கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரம் (மேற்கு), மாடூர் டோல் பிளாசா அருகில் உள்ள ஸ்ரீ உதயம் டவர்ஸ் எனும் பழைய நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் இயங்கி வந்த கட்டடத்திற்கு இடமாற்றம் செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளார்.