இளைஞர்களுக்காக தொழில் முனைவோர் சான்றிதழ் படிப்பு
தொழில் துவங்க ஆர்வமுள்ள இளைஞர்களுக்காக, ஓராண்டு தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க சான்றிதழ் படிப்பு நடத்தப்படுகிறது.தொழில் திட்டமிடல், நிதி மேலாண்மை, சந்தைப்படுத்துதல், புத்தாக்கம் மற்றும் ஸ்டார்ட்அப் உருவாக்கம் உள்ளிட்டவற்றில் நேரடி நடைமுறை பயிற்சி அளிக்கப்படும்.ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த, 21 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். கட்டணம் ரூ.80,000. தகுதியுள்ள மாணவர்களுக்கு 75 சதவீதம் வரை கல்விக் கட்டண உதவித்தொகை வழங்கப்படும்.பயிற்சி வரும் 17ம் தேதி துவங்குகிறது. www.ediitn.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 86681 01638, 86681 07552.