உள்ளூர் செய்திகள்

எம்.ஜி.எம்., ஹெல்த்கேரில் கல்வி திட்டம் தொடக்கம்

சென்னை: எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனை சார்பில், நரம்பியல் மறுவாழ்வு குறித்த தொடர் மருத்துவக் கல்வித் திட்டம் தொடர்பான கருத்தரங்கம், நேற்று முன்தினம் நடந்தது. இதை தமிழக சட்டசபை சபாநாயகர் பிரபாகர் தொடங்கி வைத்தார்.இது குறித்து, மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை இயக்குனர் வி.ஆர்.ரூபேஷ்குமார் கூறியதாவது:இந்தக் கல்வித் திட்டத்தில் உடல் மருத்துவம், மறுவாழ்வு சிகிச்சை, நரம்பியல் இயன்முறை சிகிச்சை, தொழில்முறை சிகிச்சை, பேச்சு - மொழி நோயியல் மற்றும் மருத்துவ உளவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மருத்துவ வல்லுநர்கள் பங்கேற்றனர்.நரம்பியல் மறுவாழ்வு துறையில் மருத்துவ அறிவியல், சிகிச்சை அனுபவங்கள் மற்றும் வளர்ந்து வரும் சிறந்த நடைமுறைகள் குறித்து அவர்கள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.மேலும், புதிதாகக் கண்டறியப்பட்ட மறுவாழ்வு சிகிச்சை உத்திகள் மற்றும் பல்துறை மருத்துவ நிபுணர்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து கருத்துகள் பரிமாறப்பட்டன. இக்கல்வித் திட்டம், நரம்பியல் மறுவாழ்வு துறையில் மருத்துவ நிபுணத்துவத்தை மேம்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பாக அமைந்தது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்