உள்ளூர் செய்திகள்

சி.இ.ஓ.ஏ., பள்ளிக்கு கல்வி அதிகாரி நோட்டீஸ்

சிவகங்கை: சிவகங்கை அருகே கோமாளிபட்டியில் லாரி மீது மோதி சி.இ.ஓ.ஏ., பள்ளி வேன் விபத்திற்குள்ளானது குறித்து அப்பள்ளி நிர்வாகத்திடம் மாவட்ட கல்வி அலுவலர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சிவகங்கை அருகே இடையமேலுார் சி.இ.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளியில் செப்., 5 அன்று நடக்க இருந்த விளையாட்டு விழா நிகழ்ச்சி ஏற்பாட்டிற்காக விடுமுறை நாளான செப்., 4 அன்று காலையில் மாணவர்களை அழைத்து கொண்டு பள்ளி வேன் சென்றது.அன்று காலை 09:00 மணிக்கு கோமாளிபட்டி கிராபைட் ஆலை ஆர்ச் முன் லாரி மீது பள்ளி வேன் மோதி விபத்திற்குள்ளானது. இதில் வேன் டிரைவர் எத்திராஜ் பலியானார். வேன் கண்டக்டர், மாணவர்கள் 9 பேர் என 10 பேர் காயமுற்றனர். விடுமுறை நாளில் விதிகளை மீறி பள்ளிக்கு வேனில் மாணவர்களை அழைத்து சென்று விபத்து ஏற்படுத்திய பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர் வலியுறுத்தினர்.இதையடுத்து பள்ளி வேன் விபத்து குறித்தும், விடுமுறை நாளில் எப்படி பள்ளிக்கு மாணவர்களை வரவழைத்தீர்கள் என்பது குறித்து மாவட்ட கல்வி (தனியார் பள்ளிகள்) அலுவலர், இடையமேலுார் சி.இ.ஓ.ஏ., பள்ளி தாளாளர், முதல்வர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்