விளையாட்டு போட்டிகளில் கல்லுாரி மாணவர்கள் உற்சாகம்
தேனி: முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் கல்லுாரி பிரிவு போட்டிகள் நேற்று துவங்கியது.மாணவர்களுக்கு ஹேண்ட்பால், ஹாக்கி, வாலிபால், டேபிள் டென்னிஸ், கிரிக்கெட், கூடைப்பந்து, மாணவிகளுக்கு டேபிள் டென்னிஸ், யோகா உள்ளிட்ட போட்டிகள் நடக்கிறது. கல்லுாரி மாணவர்கள், மாணவிகளுக்கு இன்றும் பல்வேறு போட்டிகள் நடக்கிறது.மாவட்ட அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்கள், குழுக்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெறுவார்கள். போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவக்குமார் தலைமையிலான உடற்கல்வி ஆசிரியர்கள், இயக்குநர்கள் குழுவினர் ஒருங்கிணைத்தனர்.