கீழச்சிவல்பட்டி பள்ளியில் உடற்கல்வி ஆசிரியரின்றி தவிப்பு
சிவகங்கை: கீழச்சிவல்பட்டி அரசு மேல்நிலை பள்ளிக்கு உடற்கல்வி ஆசிரியரை நியமிக்க கோரி கலெக் டரிடம் மாணவர்கள் புகார் அளித்தனர்.திருப்புத்துார் தாலுகா கீழச்சிவல்பட்டியில் உள்ள தியாகராஜன் நினைவு அரசு மேல்நிலை பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளி மாணவர்கள் சிலம்பம், கபடி, ஓட்டம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் போன்ற விளையாட்டுக்களில் ஆர்வமாக உள்ளனர்.மேலும் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்று பரிசு வெல்லவும் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், இப்பள்ளிக்கு கடந்த சில ஆண்டாக உடற்கல்வி ஆசிரியரே இல்லை. இது குறித்து மாணவர்கள் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தும் அவர் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பிடம் சுகா தாரமற்ற முறையில் இருப்பதால் நோய் தொற்று ஏற்படுகிறது. இப்பள்ளிக்கு கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வுக்கே வருவதில்லை.எனவே இப்பள்ளிக்கு உடற்கல்வி ஆசிரியரை நியமித்து, விளை யாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என கலெக்டர் ஆகாஷிடம் புகார் அளித்தனர்.