உள்ளூர் செய்திகள்

முதுகலை படிப்பில் சேர மாணவியருக்கு அழைப்பு

சேலம்: சேலம் அரசு மகளிர் கலைக்கல்லுாரியில், 2026 - 27ம் ஆண்டு முதுகலை பட்டப்படிப்புக்கான முதல் கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது.தற்போது கலைப்பிரிவில் எம்.ஏ., தமிழ் - 25, ஆங்கிலம் - 28, வரலாறு - 33, பொருளியல் - 23 காலி இடங்களும், அறிவியல் பாடப்பிரிவில், கணிதம் - 10, இயற்பியல் - 17, வேதியியல் - 16, கணினி அறிவியல் - 13 காலி இடங்களும் உள்ளன. இதில் நேரடி சேர்க்கை மூலம் மாணவியர் சேரலாம். விருப்பம் உள்ளவர்கள், பள்ளி மதிப்பெண் சான்றிதழ்கள், பி.ஏ., பி.எஸ்.சி., சான்றிதழ்கள், அசல், நகல், டி.சி.,யுடன் நேரில் வர வேண்டும் என, அக்கல்லுாரி முதல்வர் காந்திமதி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்