ஆசிரியர் மன்ற ஒன்றிய செயற்குழு கூட்டம்
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரத்தில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஒன்றிய செயற்குழு கூட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் தேவராசன் தலைமை வகித்தார். செயலாளர் ரவி வரவேற்றார். கூட்டத்தில், இடைநிலை தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள ஊதிய அநீதி கலைக்கப்பட வேண்டும்.2026 சட்டசபை தேர்தலின் வாக்குறுதிப்படி, ஆசிரியர்- அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கட்டாய ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் தனி சிறப்பு சட்டத்தை, தமிழக அரசு இயற்ற வேண்டும்.ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி மற்றும் ஆசிரியர் பாதுகாப்பு சட்டம் விரைந்து இயற்ற வேண்டும். ஒன்றிய ஆசிரியர்கள் மருத்துவ விடுப்பு கோரும்போது அலோபதி அரசு மருத்துவரிடம் மட்டுமே மருத்துவ விடுப்பு சான்று பெற்று அளித்திட வேண்டும் என்ற கட்டாயத்தை தொடக்க கல்வித்துறை அலுவலர்கள் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில செயற்குழு உறுப்பினர் தேவகி, மாவட்ட தணிக்கைகுழு உறுப்பினர் சாந்தி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஈஸ்வரி, மாவட்ட செயலாளர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.