அரசுப் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்
திருப்பூர்: பெருந்தொழுவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் தொடக்க விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. தலைமை ஆசிரியர் பிச்சைப்பாண்டியன் வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) காளிமுத்து தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ். மாவட்ட தொடர்பு அலுவலர் சாந்தி, நாட்டுநலப்பணி திட்ட செயல்பாடுகள் குறித்து பேசினார். 'போதைப்பொருள் மற்றும் காசநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்குவது' என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. கடந்த 26ம் தேதி தொடங்கிய இம்முகாம், அக்., 2 வரை நடைபெறுகிறது.பெருந்தொழுவில் 'போதைப்பொருள் இல்லா தமிழகம்' குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.