உள்ளூர் செய்திகள்

சேதமடைந்த வகுப்பறையை சீரமைக்க பெற்றோர் கோரிக்கை

கூவத்துார்: பரமேஸ்வரமங்கலம் அரசு பள்ளியில் சேதமடைந்த வகுப்பறையை சீரமைக்க வேண்டும் என, மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.கூவத்துார் அருகே பரமேஸ்வரமங்கலத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில், 2014ம் ஆண்டு கல்பாக்கத்தில் இயங்கும் சென்னை அனுமின் நிலையம் சார்பில், 14க்கும் மேற்பட்ட வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வகம் கட்டப்பட்டன. 12 ஆண்டுகளாகியும், பராமரிப்பு பணிகளோ, வண்ணம் பூசும் பணிகளோ நடக்கவில்லை. இதனால், வகுப்பறை கட்டடங்கள் சேதமடைந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. அதே போல், 2012ம் ஆண்டு கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடமும் சேதமடைந்துள்ளது. இதனால், பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியர் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.எனவே, சேதமடைந்த வகுப்பறையை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்