உள்ளூர் செய்திகள்

பொறுப்பு துணைவேந்தர்கள் தேர்வில் அரசியல் சிபாரிசா?

மதுரை: தமிழக பல்கலைகளில் அரசியல் சிபாரிசு இல்லாமல் பொறுப்பு துணைவேந்தர்கள் தேர்வு நடக்க வேண்டும் என பேராசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.மாநில அளவில் 14 பல்கலைகளில் துணைவேந்தர் பணியிடங்கள் தி.மு.க., ஆட்சியில் இருந்து காலியாக உள்ளன. பல்கலையில் பணியாற்றும் சீனியர் பேராசிரியர் ஒருவரை தற்காலிகமாக பொறுப்பு துணைவேந்தராக தேர்வு செய்ய துறை அமைச்சர் விஸ்வநாதன் நடவடிக்கை எடுத்தார்.இதையடுத்து பல்கலை வாரியாக தலா 10 சீனியர் பேராசிரியர்கள் கொண்ட பட்டியல் தயார் செய்யப்பட்டது. அவர்கள் பின்னணி குறித்தும் போலீசார் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில், சில பல்கலைகளில் பொறுப்பு துணைவேந்தர் பதவியை பெற அரசியல் ரீதியாக காய் நகர்த்துவதாக புகார் எழுந்துள்ளது.பேராசிரியர்கள் கூறியதாவது: சில பல்கலைகளில் 4 ஆண்டுகளாக கூட துணைவேந்தர் பணியிடம் காலியாக கிடக்கிறது. சிலர் அரசியல் பின்னணியில் பதவியை பெற முயற்சிக்கின்றனர். இதனால் தகுதியுள்ள பேராசிரியர்கள் பாதிப்பர். எனவே சிபாரிசுக்கும் இடமின்றி பொறுப்பு துணைவேந்தரை தேர்வு செய்ய வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்