குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் பணியாற்ற வாய்ப்பு
சென்னை: குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில், ஒப்பந்த பணியாளராக பணியாற்ற விண்ணப்பிக்கலாம் என, சென்னை கலெக்டர் மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:சென்னை குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில், சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர், ஆற்றுப்படுத்துநர், உதவியாளர் உடன் கூடிய தகவல் உள்ளீட்டாளர், புறத்தொடர்பு பணியாளர் ஆகிய பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.சட்டப் பணிக்கு, சட்டப்பிரிவில் பட்டமும், பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள் சார்ந்த அரசு நிறுவனம் அல்லது தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும். மாதம் 27,804 ரூபாய் வழங்கப்படும்.ஆற்றுப்படுத்துநர் பணிக்கு இளங்கலை பட்டமும், குறைந்தபட்சம் ஓராண்டு அனுபவம் உள்ளவர்களுக்கு, மாதம் 18,536 ரூபாய் வழங்கப்படும்.உதவியாளருக்கு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி மற்றும் டேலி சான்றிதழுடன், ஓர் ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும். மாதம் 13,240 ரூபாயும், புறத்தொடர்பு பணியாளருக்கு, 10,592 ரூபாயும் வழங்கப்படும்.விருப்பமுள்ளவர்கள் வரும் 27ம் தேதிக்குள் சென்னை, ஆலந்துாரில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில், நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.