உள்ளூர் செய்திகள்

சி.ஏ. மாணவர்களுக்கு பி.காம். படிப்பில் சலுகை

தற்போது சி.ஏ. படிக்கும் மாணவர்கள், சென்னை பல்கலைக்கழகத்தில் பி.காம். படிக்கையில், அவர்களுக்கு சில பாடங்களிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று பல்கலை துணைவேந்தர் ஜி. திருவாசகம் கூறியுள்ளார். இது சம்பந்தமாக விரைவில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்திய சார்டர்ட் அக்கவுண்டன்ட் நிறுவனத்துடன் கையெழுத்தாகும் என்று அவர் தெரிவித்தார். ஸ்ரீ குரு கிருபா மேலாண்மை கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற மாணவர்களுக்கான பரிசு வழங்கும் விழாவில் பேசிய அவர், " இந்த புதிய ஏற்பாடானது, சி.ஏ. படிக்கும் மாணவர்கள் மீண்டும் பழைய பாடங்களையே படிப்பதை தவிர்க்கும். இது சம்பந்தமான முதற்கட்ட பேச்சுவார்த்தையை ஐ.சி.ஏ.ஐ. அமைப்புடன் நடத்தியுள்ளோம். டிசம்பர் மாத இறுதியில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம்" என்ற அவர், அடுத்த கல்வியாண்டு முதல், பாரென்சிக் அக்கவுண்டிங் மற்றும் அக்கவுண்டிங் துறையில் சிறப்பு தன்மைகளைக் கொண்ட மேலாண்மை படிப்பு போன்றவற்றை இளநிலை பட்ட அளவில் அறிமுகப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்