உள்ளூர் செய்திகள்

விரைவில் ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் நுழைவுத் தேர்வு?

பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் தங்களது இன்ஜினியரிங் கனவுகளை நனவாக்க பல தேர்வுகளை எழுதுவதைக் காண்கிறோம். ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச் சென்றுஅடுத்தடுத்த நுழைவுத் தேர்வு எழுதுவது என்பது பெரிய கடினமான செயலாக இருப்பதையும் அறிவோம். இதற்குப் பதிலாக ஒரே நுழைவுத் தேர்வு எழுதி எந்தப் படிப்பிலும் சேர வகை செய்யும் பொதுத் தேர்வு குறித்து ஆராய, மத்திய அரசு ஒரு நிபுணர் குழுவை நியமித்துள்ளது. இதன்படி ஐ.ஐ.டி., படிப்பு களுக்காக நடத்தப்படும் ஜே.ஈ.ஈ., ஏ.ஐ.இ.இ.இ., போன்ற தேர்வுகளை தனித்தனியாக எழுதாமல் ஒரே தேர்வாக நடத்திட மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் முனைந்துள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே நியமிக்கப் பட்ட ஆச்சாரியார் குழு பரிந்துரை களையும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. நாடெங்கும் ஒரே அடிப்படையில் பிளஸ் 2 மதிப்பெண் தருவது மற்றும் தேசிய நுண்ணறிவுத் தேர்வு நடத்துவது போன்ற யோசனைகளை இந்தக் குழு தந்திருக்கிறது. புதிய குழுவின் பரிந்துரைகள் தற்போது ஆவலாக எதிர்பார்க்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்