இந்தோனேஷியா பல்கலையுடன் பாண்டிச்சேரி பல்கலை ஒப்பந்தம்
பாண்டிச்சேரி பல்கலைக்கழகமும், இந்தோனேஷியாவிலுள்ள சியா கவுலா பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அந்த ஒப்பந்தத்தின்படி, இரு பல்கலைக்கழகங்களும் அறிவியல் ஆராய்ச்சி மூலங்கள், வெளியீடுகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரை பரிமாறிக் கொள்ளும். இந்த ஒப்பந்தத்தில் பாண்டிச்சேரி பல்கலை சார்பாக பதிவாளர் எஸ். லோகநாதனும், சியா கவுலா பல்கலை சார்பாக அதன் ரெக்டார் டார்ணி எம். தாவுத் -ம் கையெழுத்திட்டனர். ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் டார்ணி எம். தாவுத் கூறுகையில், "சியா கவுலா பல்கலையிலிருந்து அடுத்த 6 மாதங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்கள், பாண்டிச்சேரி பல்கலையில் படிப்புகளை மேற்கொள்வார்கள்" என்றார். மேலும் பாண்டிச்சேரி பல்கலை துணைவேந்தர் ஜே.ஏ.கே. தலீன் கூறுகையில், "சியா கவுலா போன்று மொத்தம் 20 கல்வி நிறுவனங்களுடன் எங்கள் பல்கலைக்கழகம் ஒத்துழைப்பை மேற்கொண்டுள்ளது" என்றார்.