படிப்பதில் பழைய மனப்பாட முறையே சிறந்தது?
அமெரிக்காவின் இண்டியானாவில் உள்ள பர்டியூ பல்கலைக்கழகத்தில் சில ஆராய்ச்சியாளர்கள் கற்றல் சம்பந்தமாக ஆய்வுகளை மேற்கொண்டனர். அதில், பாடப்புத்தகங்களிலிருந்து படித்தவற்றை தக்கவைத்துக்கொள்ளும் விஷயத்தில் அதிக பலன் தருவதாக இன்று பல ஆசிரியர்கள் நம்பும் மையக்கருத்து(கான்செப்ட்) அல்லது அறிவு செயல்பாடு(மைன்ட் மேப்பிங்) போன்ற அம்சங்களை விட, மனப்பாட முறையே சிறந்தது என்ற முடிவு கிடைத்துள்ளது. மேலும் புதுவகை கற்றல் செயல்முறைகளில், வார்த்தைகள்-சிந்தனைகள்-நோக்கங்கள் ஆகியவற்றுக்கிடையிலான தொடர்பை விளக்க, விரிவான விளக்கப்படங்களை வரைதல் போன்ற செயல்பாடுகள் உள்ளடங்கியிருக்கும். ஆனால் இதுபோன்ற விரிவான நடவடிக்கைகளைக் காட்டிலும் மனப்பாடம் செய்தல் மற்றும் அடிக்கடி நடக்கும் சாதாரண தேர்வுகள் போன்றவை அதிக உபயோகமானதாக உள்ளன என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த வழிமுறைகள், குறுகியகால மற்றும் நீண்டகால நினைவுத்திறனுக்கு அதிக உதவி புரிவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏறக்குறைய 100௦௦ கல்லூரி மாணவர்களை பயன்படுத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.