பி.இ.எம்.எல்., நிறுவனத்தில் டிரெய்னி பணி இடங்கள்
பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் என்ற பெயரில் பொதுத் துறையில் துவங்கப்பட்டு தற்போது அரசு மற்றும் தனியார் இணைந்து நடத்தி வரும் பி.இ.எம்.எல்., என்ற நிறுவனம் கர்நாடகாவை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் இன்ஜினியர், உதவி இன்ஜினியர், நிர்வாக பிரிவுகளில் டிரெய்னிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இன்ஜினியர் பிரிவில் 90 இடங்களும், உதவி இன்ஜினியர் பிரிவில் 30 இடங்களும், நிர்வாக பிரிவில் பத்து இடங்களும் நிரப்பப்பட உள்ளன. வயது வரம்பு: பி.இ.எம்.எல்., நிறுவனத்தின் இன்ஜினியரிங் இடங்களுக்கு விண்ணப்பிக்க வயது 26 க்கு உட்பட்டு இருக்க வேண்டும். நிர்வாக டிரைய்னி பதவிக்கு விண்ணப்பிக்க வயது 28 க்குள் இருக்க வேண்டும். கல்வி தகுதி: பி.இ.எம்.எல்.,லின் இன்ஜினியரிங் மற்றும் அசிஸ்டென்ட் இன்ஜினியரிங் டிரைய்னி பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க அங்கீகரிகப்பட பல்கலைக் கழகத்தின் மூலமாக மெக்கானிகல், எலெக்ட்ரிகல், எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யுனிகேஷன், ஆட்டோமொபைல் அல்லது புரொடக்ஷன் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் முழு நேரப் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேனேஜ்மென்ட் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்க எம்.பி.ஏ., எம்.எஸ்.டபிள்யு., எம்.ஏ., (சமுகஅறிவியல்), அல்லது இதே பிரிவுகளில் இரண்டு ஆண்டு கால முழு நேரப்படிப்பாக முது நிலை டிப்ளமோ அல்லது முது நிலை பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். பயிற்சி காலம்: இன்ஜினியரிங் மற்றும் நிர்வாக டிரைய்னி பதவிகளுக்கு ஒரு ஆண்டு கால பயிற்சி இருக்கும். அசிஸ்டென்ட் இன்ஜினியர் பதவிக்கு இரண்டு ஆண்டு கால பயிற்சி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்ச்சி முறை: பி.இ.எம்.எல்., நிறு வனத்தின் மேற்கண்ட பதவிகளுக்கு எழுத்து தேர்வு மூலமாக தேர்ச்சி இருக்கும் என்று இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. முழு விபரங்கள் அறிய இந்த நிறுவனத்தின் இணைய தளத்தைப் பார்க்கவும். கட்டணம் எவ்வளவு?: இந்தப் பதவி களுக்கு விண்ணப்பிக்க ரூ. 100 ஐ ஸ்டேட் வங்கியின் 31006750220 என்ற கணக்கில் செலுத்த வேண்டும். வேறு எந்த முறையிலும் கட்டணத்தை செலுத்த முடியாது. எஸ்.சி., எஸ்.டி.,உடல் ஊனமுற்ற பிரிவினருக்கு இந்த கட்டணம் கிடையாது. விண்ணப்பிப்பது எப்படி: பி.இ.எம்.எல்., நிறுவனத்தின் டிரைய்னி காலி இடங்களுக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்கும் முன் இந்த நிறுவனத்தின் இணைய தளத்தில் முழு விபரங்களை அறியவும். விண்ணப்பிக்க இறுதி நாள் : 16.02.2011 இணைய தள முகவரி: www.bemlindia.com