உள்ளூர் செய்திகள்

பார்மசூடிகல் படிப்பில் இனி முனைவர் பட்டம்

நாட்டில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட 6 புதிய தேசிய பார்மசூடிகல் கல்வி நிறுவனங்களில் இந்தாண்டு முதல் பிஎச்.டி. படிப்புகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது மொஹாலியிலுள்ள பார்மசூடிகல் கல்வி நிறுவனம் மட்டுமே டாக்டோரல் படிப்புகளை வழங்கி வருகிறது. இந்தியாவில் ஒரு வருடத்திற்கு குறைந்தபட்சம் 1000 பயிற்சிபெற்ற பார்மா நிபுணர்கள் தேவை. அதேசமயத்தில் மொஹாலி கல்வி மையம் 150 நிபுணர்களை மட்டுமே வருடாவருடம் வழங்குகிறது. தற்போதைய 6 புதிய பார்மசூடிகல் கல்வி நிறுவனங்கள் ஒவ்வொன்றிலும், ஆரம்பத்தில் 10 முனைவர் ஆராய்ச்சி இடங்கள் மட்டுமே இருக்கும். இந்த 6 புதிய பார்மசூடிகல் கல்வி நிறுவனங்கள் தற்போது அகமதாபாத், ஐதராபாத், கொல்கத்தா, குவஹாத்தி, ஹாஜிபூர், ரேபரேலி ஆகிய இடங்களில் அமைந்து முதுநிலை படிப்புகளை வழங்கி வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்