உள்ளூர் செய்திகள்

தனி வணிக அமைப்பை உருவாக்கும் சி.எஸ்.ஐ.ஆர்.

நாட்டின் முன்னணி அறிவியல் ஆய்வு மையமான சி.எஸ்.ஐ.ஆர்.(அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில்) தனக்கென ஒரு வணிக அமைப்பை உருவாக்க உள்ளது. சி.எஸ்.ஐ.ஆர். மேற்கொள்ளும் ஆராய்ச்சியால் விளையும் நன்மைகளை மக்களிடம் வெற்றிகரமாக எடுத்துசெல்ல இதுபோன்ற ஒரு வணிக அமைப்பு தேவை. எனவே அதற்கான பணியில் சி.எஸ்.ஐ.ஆர். ஈடுபட்டு வருகிறது என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.கே. பன்சால் தெரிவித்தார். அந்த வணிக அமைப்பானது பொது-தனியார் கூட்டு முயற்சியிலோ அல்லது சி.எஸ்.ஐ.ஆர். மட்டுமே மேற்கொள்ளும் முயற்சியாலோ ஏற்படுத்தப்படலாம். தற்போது தொழில்துறையில் தொழில்நுட்பத்தை சேர்க்கும் விதமாக ஒரு சிறிய குழு பணியாற்றி வருகிறது. ஆனால் முறையான ஒருங்கிணைப்பு இல்லை. ஆனால் இந்த வணிக மையம் அந்த குறையைப் போக்கும் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன. சில காலத்திற்கு முன்பாக, மத்திய திட்டக் கமிஷன் இதுசம்பந்தமான ஒரு ஆலோசனையை சி.எஸ்.ஐ.ஆர். அமைப்புக்கு தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்