உள்ளூர் செய்திகள்

புதிய விசா நடைமுறை நன்மைக்குத்தான்: பிரிட்டன்

பிரிட்டனின் புதிய விசா நடைமுறையானது, சிறந்த மற்றும் புத்திசாலியான மாணவர்களை தொடர்ந்து ஈர்ப்பதை உறுதிசெய்யும் என்று பிரிட்டிஷ் ஹை கமிஷன் கூறியுள்ளது. இதுதொடர்பாக ஹை கமிஷன் தரப்பில் கூறப்படுவதாவது, "பிரிட்டனும், பிரிட்டனின் கல்வி நிறுவனங்களும் புகழ் வாய்ந்தவை. ஆனால் அதேசமயம் முறைகேடாக இந்த நாட்டிற்குள் வரும் மாணவர்கள் தடுக்கப்பட வேண்டியவர்கள். ஏனெனில் இதுபோன்று வருபவர்களின் நோக்கம் படிப்பது அல்ல, மாறாக வேலைசெய்வது. இந்த புதிய மாற்றமானது, சிறந்த இந்திய மாணவர்களை பாதுகாப்பதற்குத்தான். ஆனால் அதேசமயம் பல தவறான ஏஜெண்டுகள் விசா நடைமுறையை சீரழிக்கின்றனர். இந்தியாதான், உலகிலேயே அதிகளவில் பிரிட்டன் விசாவை பெறும் நாடாக இருக்கிறது. கடந்த 2010 ம் ஆண்டில் மட்டும் சுமார் 50 ஆயிரம் விசா விண்ணப்பங்கள் கையாளப்பட்டுள்ளன. விசாவிற்கு விண்ணப்பம் செய்பவர்கள் யாரும் போலி ஆவணங்களை சமர்ப்பித்து, தவறான தகவல்களை அளிக்க வேண்டாம். இதன்மூலம் அவர்கள் 10 ஆண்டுகள் தடை என்ற ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும். பிரிட்டன் விசா செயல்பாட்டைப் பற்றி அறிந்துகொள்ள யாரும் ஏஜெண்டுகளை நாட வேண்டாம். ஏனெனில் அதுபற்றிய அனைத்து விவரங்களும் இலவசமாகவே இணையதளத்தில் கிடைக்கின்றன" என்று கூறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்