உள்ளூர் செய்திகள்

நுழைவுத் தேர்வு நடக்கும் முக்கிய தேதிகள்

விண்ணப்பங்கள் பெற கடைசி நாள், நுழைவுத் தேர்வுக்கான தேதி போன்ற முக்கிய நாட்களை உங்களுக்கு நினைவூட்டவே இந்த செய்தி. பொதுத் தேர்விற்கு இணையாக தற்போது நுழைவுத் தேர்வுகளும் முக்கியத்துவம் பெற்றுவிட்டன. எனவே, நுழைவுத் தேர்வுகளை பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாக இருக்காமல், அதற்காக கவனம் எடுத்து படித்தால், நிச்சயம் நீங்கள் கேட்கும் கல்லூரியில், கேட்கும் பாடப்பிரிவு பயில முடியும். முக்கிய தேதிகள்.. ஜிப்மர் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். பயில்வதற்கு விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 25ஆம் தேதி. அதற்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ளன. ஜிப்மர் நுழைவுத் தேர்வு ஜுன் மாதம் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. கே.ஐ.ஐ.டி. பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத் தேர்வு ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெற உள்ளது. எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரியின் நுழைவுத் தேர்வு வரும் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அன்ட் சயின்ஸ் நடத்தும் பிட்சாட் நுழைவுத் தேர்வு மே மாதம் 11ஆம் தேதி நடைபெறும். ஏராளமான மாணவர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அனைத்திந்திய பொறியியல் நுழைவுத் தேர்வு வரும் மே 1ஆம் தேதி நடைபெற உள்ளது. புதுச்சேரி பல்கலையின் நுழைவுத் தேர்வு மே மாதம் 28ஆம் தேதி நடைபெறும். எய்ம்ஸில் 6 ஆண்டுகள் கொண்ட முதுநிலை பட்டப்படிப்பில் சேரும் மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு மே 8ஆம் தேதி நடைபெற உள்ளது. எம்.பி.பி.எஸ். மாணவ சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு ஜுன் 1ஆம் தேதி நடைபெறுகிறது. பனாரஸ் ஹின்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்காக இரண்டு கட்டமாக நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. முதல் கட்ட நுழைவுத் தேர்வு மே மாதம் 8ஆம் தேதி நடைபெறும். இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களக்கு ஜுன் 12ஆம்தேதி இரண்டாம் கட்ட தேர்வு நடத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்