உள்ளூர் செய்திகள்

சிறுபான்மை மொழி பாடப்புத்தகங்கள் தயாரிப்பில் இழுபறி

சென்னை: சிறுபான்மை மொழி பாடப் புத்தகங்களுக்கான சிடி-க்கள் இன்னும் பாடநூல் கழகத்திடம் ஒப்படைக்கப்படாததால், பாடப் புத்தகங்கள் தயாராவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. சமச்சீர் கல்வி திட்டத்தில், 132 பாடத் தலைப்புகளில் பாடப் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டன. இதில் 68 பாடத் தலைப்புகளுக்கான சிடி-க்கள் மட்டுமே பாடநூல் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 64 பாடத் தலைப்புகளுக்கான சிடி-க்களை இன்னும் பாடநூல் கழகத்திடம் பள்ளிக் கல்வித்துறை ஒப்படைக்கவில்லை. இவை அனைத்தும் மலையாளம், கன்னடம், உருது, அராபிக் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய சிறுபான்மை மொழிப்பாடங்கள். சிறுபான்மை மொழிப்பாட தயாரிப்புகளுக்கு பொறுப்பேற்ற அதிகாரிகள் இன்னும் பணிகளை முடிக்காமல் இருக்கின்றனர். அனைத்து பாடங்களுக்கான சிடி-க்களை, பிப்ரவரி இறுதிக்குள் ஒப்படைக்க வேண்டுமென பாடநூல் கழகம் கெடு விதித்திருந்தது. ஆனால் இரண்டு மாதங்கள் முடியும் நிலையில், இன்னும் சிறுபான்மை மொழிப்பாடங்களுக்கான சிடி-க்களை மட்டும் ஒப்படைக்காததால், குறித்த நேரத்தில் ஏழு லட்சம் பாடப் புத்தகங்களை அச்சிடும் பணியில் இழுபறி ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்