இன்போசிஸ் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு குறைகிறது!
தகவல் தொழில்நுட்பத் துறையில் பிரபல நிறுவனமான இன்போசிஸ் கடந்த ஆண்டில் 35 ஆயிரம் பேரை வேலைக்கு எடுத்தது. இந்த ஆண்டில் 25 ஆயிரம் பேரை மட்டுமே எடுக்கப் போவதாக இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் 18 ஆயிரம் பேர் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கடந்த நிதியாண்டில் ஜூன் மாதம் வரை முடிவடைந்த முதல் காலாண்டில் 5070 பேரைத் தேர்வு செய்த இன்போசிஸ் நிறுவனம் இந்த நிதியாண்டில் முதல் காலாண்டில் 3,372 பேரை மட்டுமே தேர்வு செய்துள்ளது. பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள தேக்கநிலையை மட்டுமே இதற்குக் காரணமாகக் கூற முடியாது. உள்கட்டமைப்பு வசதிகள், வர்த்தகத் திட்டம் உள்ளிட்ட காரணங்களால் இன்போசிஸ் புதிதாகத் தேர்வு செய்யும் ஆட்களின் எண்ணிக்கை குறைகிறது என்று அந்த நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் நந்திதா குர்ஜார் தெரிவித்துள்ளார்.