உள்ளூர் செய்திகள்

கட்டணக் கொள்ளையை எதிர்த்து டெல்லியில் ஆர்ப்பாட்டம்

கல்வி வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் பல தனியார் பள்ளிகளின்(முக்கியமாக அரசு உதவிபெறாத பள்ளிகள்), நியாயமற்ற கட்டணக் கொள்ளையை எதிர்த்து வரும் 30 ம் தேதி(30-04-11), டெல்லியில், நாடுதழுவிய அளவில் பெற்றோர்களின் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அகில இந்திய பெற்றோர்கள் சங்கம்(ஏ.ஐ.பி.ஏ), இந்த ஆர்ப்பாட்டத்தினை நடத்துகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள நாடு முழுவதும் பல மாநிலங்களிலிருந்து பெற்றோர்கள் வருகின்றனர். கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் தனியார் பள்ளிகளை எதிர்த்தும், அரசால் நடத்தப்படும் பள்ளிகளின் மீதான அரசின் அலட்சியத்தை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. காலை 10 மணியிலிருந்து மதியம் 1 மணிவரை அமைதியான முறையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து ஏ.ஐ.பி.ஏ. தலைவர் அசோக் அகர்வால் கூறுகையில், "அரசு உதவிபெறாத தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை முறைப்படுத்த மத்திய அரசு ஒரு சட்டம் இயற்ற வேண்டும். இதனை வலியிறுத்தி, நாங்கள் அமைதி வழியில் இத்தகைய ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம்" என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்