உள்ளூர் செய்திகள்

ரிசர்வ் வங்கியில் ஆராய்ச்சி அதிகாரி பணி

இந்திய நிதி அமைச்சகத்தின் முக்கிய கரமாகவும், இந்தியாவில் இயங்கும் வங்கிகளைக் கட்டுப்படுத்தும் அமைப்பாகவும் உள்ள ரிசர்வ் வங்கி 1935ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. பெருமைக்குரிய இந்த வங்கியில் ரிசர்ச் ஆபிசர் பிரிவில் 10 அதிகாரிகளை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசு நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த இடங்களுக்கு இட ஒதுக்கீடும் உள்ளது. வயதுரிசர்வ் வங்கியின் ரிசர்ச் ஆபிசர் பதவிக்கு விண்ணப்பிக்க 01.04.2011 அன்று 21 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதாவது 02/04/1981 முதல் 01/04/1990க்குள் பிறந்தவராகவும் இருக்க வேண்டும். கல்வித் தகுதிபுள்ளியியல், மேதமேடிகல் ஸ்டாடிஸ்டிக்ஸ், மேதமேடிகல் எகனாமிக்ஸ், எகனாமெட்ரிக்ஸ், ஐ.ஐ.டி., காரக்பூர் மூலம் ஸ்டாடிஸ்டிக்ஸ் அண்டு இன்பர்மேடிக்ஸ், என்.டி., மும்பையின் அப்ளைடு ஸ்டாடிஸ்டிக்ஸ் அண்டு இன்பர்மேடிக்சில் ஏதாவது ஒன்றில் முது நிலைப்பட்டப் படிப்பை குறைந்தபட்சம் 55 சதவிகிதத்துடன் தேர்ச்சியுடன் முடித்திருக்க வேண்டும். கணிதத்தில் முதுநிலைப் பட்டப்படிப்பில் குறைந்த பட்சம் 55 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று அதன் பின்னர் பிரசித்தி பெற்ற கல்வி நிறுவனத்தின் மூலமாக புள்ளியியல் தொடர்புடைய படிப்பில் ஒரு டிப்ளமோ படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் மூலமாக நடத்தப்படும் எம்.ஸ்டாட்., படிப்பை குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்தவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு குறைந்த பட்ச மதிப்பெண்கள் 50 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தகுதி ஏதாவது ஒன்றுடன் இந்தப் பிரிவுகள் ஏதாவது ஒன்றில் டாக்டரேட் படிப்பு முடித்தவர்களுக்கும், ஆராய்ச்சி அனுபவம், ஆசிரியராக அனுபவம், புகழ்பெற்ற இதழ்களில் சில வெளியீடுகளை வெளியிட்ட அனுபவம் போன்றவை இருந்தால் முன்னுரிமை உள்ளது. தேர்ச்சி முறைரிசர்வ் வங்கியின் ஆராய்ச்சி அதிகாரி பதவிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படைகளில் தேர்ச்சி இருக்கும். 16.07.2011 மற்றும் 17.07.2011ல் நடத்தப்படும் எழுத்துத் தேர்வை தமிழ் நாட்டில் சென்னை மையத்தில் எழுதலாம். விண்ணப்பிப்பது எப்படிரிசர்வ் வங்கியின் ரிசர்ச் ஆபிசர் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.100/க்கான டி.டி.,யை "Reserve Bank of India" என்ற பெயரில் மும்பையில் மட்டும் மாற்றத்தக்கதாக எடுக்க வேண்டும். வங்கிச் சேவை இல்லாத பகுதிகளிலிருந்து விண்ணப்பிப்பவர்கள் போஸ்டல் ஆர்டர் மூலமாக விண்ணப்பிக்கலாம். டி.டி.,யின் பின்புறம் பெயர் மற்றும் முகவரியைத் தவறாமல் குறிப்பிட வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்குக் கட்டணம் எதுவும் கிடையாது. முழு விபரங்கள் அறிய இந்த வங்கியின் இணைய தளத்தைப் பார்க்கவும். விண்ணப்பிக்க இறுதி நாள்: 06.05.2011இணைய தள முகவரி: www.rbi.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்