உள்ளூர் செய்திகள்

தனியார் பள்ளிகள் சங்கம் தங்கவயலில் 11ல் மாநாடு

தங்கவயல்: தங்கவயல் தனியார் பள்ளிகள் சங்க மாநாடு, அசோக் நகர் சாலையில் உள்ள மஸ்தா கிராண்ட் மஹாலில் வரும் 11ம் தேதி நடக்கிறது.தங்கவயல் சங்க தலைவர் கிரண் குமார் பேட்டி:கர்நாடக மாநிலத்தில் 18,000 தனியார் பள்ளிகள் உள்ளன. கோலார் மாவட்டத்தில் 1,000த்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் உட்பட 13,000 பள்ளிகள், இச்சங்கத்தில் உள்ளன. தங்கவயல் தனியார் பள்ளிகள் சங்க மாநாடு, அசோக் நகர் சாலையில் உள்ள மஸ்தா கிராண்ட் மஹாலில் வரும் 11ம் தேதி காலை 9:00 மணிக்கு நடக்கிறது.தங்கவயலில் நடக்கும் நான்காவது மாநாடு. ஆசிரியர்கள், பள்ளிகளின் பிரச்னைகள் தீர்வு காண்பதில் இச்சங்கம் ஈடுபட்டு உள்ளது. சங்கத்தில் இல்லாதவர்கள் சிலர் குறை கூறி வருகின்றனர். இதை நாங்கள் பொருட்படுத்த போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்