உள்ளூர் செய்திகள்

அறிவியல் இயக்க ஆய்வு கட்டுரைகள் 14 ம் தேதிக்குள் அனுப்பலாம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே அறிவியல் விழிப்புணர்வு-ஆய்வு மனப்பான்மையை உருவாக்க அறிவியல் திருவிழா நடத்துகிறது.  இதில் அறிவியல் பரப் புதல், மூடநம்பிக்கையை அகற்றுதல், சுற்றுப்புற பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் மேம்பாடு, ஆரோக்கியம் மற் றும் சுகாதாரம், கல்வி, பெண் உரிமை, நவீன தொழில் நுட்பத்தை பயன் படுத்துதல் ஆகிய தலைப் புகளில் ஒன்றை எடுத்து கொண்டு ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்கலாம்.இதில் 17 வயது முதல் 21 வயதுக்குட்பட்ட மாணவர்கள், இளைஞர்கள் பங் கேற்கலாம். ஒவ்வொரு ஆய்வு குழுவிலும் 2 முதல் 4 மாணவர்களும், ஒரு வழிகாட்டி ஆசிரியரும் இடம் பெறலாம். ஆய்வு கட்டுரைகள் தமிழிலோ அல் லது ஆங்கிலத்திலோ இருக்கலாம். கலந்து கொள்ளும் அனைவருக் கும் சான்றிதழும், சிறந்த மூன்று ஆய்வு குழுக்களுக்கு பரிசும் வழங்கப்படும்.மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படும் சிறந்த மூன்று ஆய்வு கட்டுரைகள் மாநில அளவில் நடைபெறும் இளைஞர் அறிவியல் விழாவில் சமர் பிக்கப்படும்.பங்கேற்கும் ஒவ்வொரு ஆய்வு குழுவும் நுழைவு கட்டணமாக 100 ரூபாய் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ஈரோடு என்ற பெயருக்கு டி.டி., எடுத்து அனுப்ப வேண்டும்.மேலும் விபரங்களுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பூபதி  (94439 87206  வீட்டு எண் -ஏ.13, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, மகாராஜபுரம், விழுப்புரம் என்ற முகவரிக்கு கடித மூலமும், சேகர் 94437 01624 என்ற மொபைலிலும் தொடர்பு கொள்ளலாம்.   பங்கேற்கும் குழுக்கள் வரும் 14 ம் தேதிக்குள் குழு உறுப்பினர் விபரம், வழிகாட்டி ஆசிரியர் விபரம் ஆகியவற்றை மாவட்ட ஒருங்கிணைப் பாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்