உள்ளூர் செய்திகள்

சென்னை பல்கலை கல்வி கட்டணம் 15 சதவீதம் உயர்வு

சென்னை: சென்னை பல்கலையில் கல்விக் கட்டணம், 15 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.சென்னை பல்கலை பதிவாளர் ரீட்டாஜான், சேப்பாக்கம், மெரினா, கிண்டி, தரமணி மற்றும் சேத்துப்பட்டு வளாகங்களில் செயல்படும் துறைத் தலைவர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:தமிழக அரசின் நிதித்துறையின் பரிந்துரைப்படி, 2026 - 27ம் கல்வியாண்டு முதல், சென்னை பல்கலையில் அனைத்து துறை படிப்புகளுக்கும் 10 சதவீதமும், சுயநிதி படிப்புகளுக்கு 15 சதவீதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.இதற்கான ஒப்புதல், ஏற்கனவே சிண்டிகேட் கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்