உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி மாணவ, மாணவியர் 150 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி

கிருஷ்ணகிரி: நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., ஆகிய இளநிலை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை, 'நீட்' நுழைவுத்தேர்வு கடந்த, மே 3ல், நடந்தது. அந்த தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, 'நீட்' மறுதேர்வு கடந்த, ஜூன் 21ல், நடத்தப்பட்டு, கடந்த, 16ல், முடிவுகள் வெளியானது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 11 மையங்களில் நடந்த, 'நீட்' தேர்வில், 3,588 பேர் தேர்வு எழுதினர். இதில் அரசு பள்ளிகளில் படித்த, 150 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.இது குறித்து, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்தாண்டு, 313 அரசு பள்ளி மாணவர்கள், 'நீட்' தேர்வை எழுதி, 150 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். குன்னத்துார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் பூவரசன், 720க்கு, 515 மதிப்பெண்கள் பெற்று அரசு பள்ளிகள் அளவில் முதலிடத்தை பிடித்து உள்ளார். இதே போல் அஞ்செட்டி அரசு பள்ளி மாணவர் நவீன்குமார், 451 மதிப்பெண்கள் பெற்று, 2வது இடத்தை பிடித்து உள்ளார். மேலும், 20க்கும் மேற்பட்டோர், 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்