கனவு ஆசிரியர் விருதுக்கு மாவட்டத்தில் 16 பேர் தேர்வு
உடுமலை: பள்ளிகளில் கற்பித்தல் பணிகளில் ஈடுபடும் துடிப்பான ஆசிரியர்களை கவுரவப்படுத்தி, ஊக்கப்படுத்த, ஒவ்வொரு ஆண்டும் கனவு ஆசிரியர் விருது அறிவிக்கப்படுகிறது.மாநிலம் முழுதும், 380 பேர் இவ்விருதுக்கு தேர்வாகியுள்ளனர்; திருப்பூர் மாவட்டத்தில், 16 பேர் தேர்வாகியுள்ளனர். லோகேஸ்வரி (ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பள்ளிபாளையம், பெரியாயிபாளையம்), நல்லகணபதி(ஊ.ஒ., நடுநிலைப்பள்ளி, சமத்துவபுரம் - நெருப்பெரிச்சல்), வினோதினி (ஊ.ஒ., துவக்கப்பள்ளி, காளிபாளையம்), வனிதா(மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, அனுப்பர் பாளையம்புதுார்).உமாமகேஸ்வரி (அரசு மேல்நிலைப்பள்ளி, விஜயாபுரம்), சுரேஷ்குமார், (ஊ.ஒ., துவக்கப்பள்ளி, எலையமுத்துார்), சுசீலா, (ஊ.ஒ., துவக்கப்பள்ளி, ராக்கியாபாளையம்), சிவக்குமார் (அரசு மேல்நிலைப்பள்ளி, கணக்கம்பாளையம்), முருகேசன்(ஊ.ஒ., நடுநிலைப்பள்ளி, புதுருத்ராவதி), கவிதா (துரை ராமசாமி நகர் அரசு உயர்நிலைப்பள்ளி, வெள்ள கோவில்).என்.கவிதா(அரசு உயர்நிலைப்பள்ளி, கொங்கல் நகர்), சிவகாமி தேவி(அரசு மேல்நிலைப்பள்ளி, கோடங்கிபாளையம்), ஜெகதீஷ் சங்கர்(ஊ.ஒ., நடுநிலைப்பள்ளி, முத்துார்), மோகனப்பிரியா(மாநகராட்சி துவக்கப்பள்ளி, செல்லம் நகர்), பிருந்தா(ஊ.ஒ., நடுநிலைப்பள்ளி, சின்னகவுண்டம்பாளையம்), நித்யா (ஊ.ஒ., நடுநிலைப்பள்ளி, மாதப்பூர்).இவர்களுக்கு, வரும், 19ம் தேதி நாமக்கல்லில் நடைபெற உள்ள விழாவில், விருது வழங்கப்படுகிறது.