உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி

உடுமலை: உடுமலை, மடத்துகுளம் மற்றும் குடிமங்கலம் ஒன்றியங்களுக்கான, அரசு பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் நடந்தது. உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துகுளம் ஒன்றியங்களுக்கான அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் நடந்தது. உடுமலை பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு ராஜேந்திரா ரோடு அரசு பள்ளி மற்றும் மடத்துகுளம் மற்றும் குடிமங்கலம் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடந்தது. இப்பயிற்சியில், வரும் கல்வியாண்டில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது குறித்து வலியுறுத்தப்பட்டது. சிவசக்தி காலனி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் செல்லதுரை கூறியதாவது: பள்ளியிலுள்ள சிறப்பு அம்சங்கள் மற்றும் செயல்பாடுகள், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை நோட்டீஸ் அல்லது பிளக்ஸ் பேனர்கள் அச்சிட்டு பெற்றோரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும் பள்ளி மாணவர்களின் மூலம் விழிப்புணர்வு பேரணிகள் நடத்துவது போன்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும். பள்ளியின் சுற்றுப்பகுதிகளை தூய்மையாக வைத்துக்கொள்ள, மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் செயல்பாடுகள், கல்வித்தரம் மற்றும் உளவியல் பிரச்னைகளை பெற்றோருக்கு எடுத்துரைக்கும் வகையில் கூட்டங்கள் நடத்த வேண்டும் என பயிற்சியாளர்கள் அறிவுறுத்தினர். இவ்வாறு அவர் கூறினார். வால்பாறை: வால்பாறை தாலுகாவில் உள்ள, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயற்சி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. ஆரம்ப இடைநிலைக்கல்வி குறித்த பயிற்சியினை பள்ளி தலைமை ஆசிரியர் ராபின்சன் துவக்கி வைத்தார். இதுகுறித்து பயிற்சி ஆசிரியை டெய்சிலீமா கூறும்போது, "அனைத்துப் பள்ளிகளிலும் கட்டமைப்பு வசதி உள்ளதா?, பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்பை வசதிகள் உள்ளதா? போதிய ஆசிரியர் உள்ளனரா? என்பது குறித்தும், பள்ளி வளர்ச்சிக்கு மேலண்மைக்குழு உறுப்பினர்களின் நடவடிக்கை என்ன.? பள்ளி செல்லா மாணவர்கள் குறித்த கணக்கெடுப்பு, இடைநிற்றல் போன்றவை குறித்து, உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இரண்டு கட்டமாக நடந்த இந்த பயிற்சியில் எட்டு பள்ளிகளை சேர்ந்த 24 பேர் கலந்து கொண்டனர்" என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்