உள்ளூர் செய்திகள்

தினமலர் வழிகாட்டி: மதுரையில் ஜூலை 2 ல் நடக்கிறது

மதுரை: மதுரையில் தினமலர் நாளிதழ் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் தினமலர் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் ஜூலை 2 மதியம் 3:00 மணி முதல் 6:00 மணி வரை நடக்கிறது.தமிழகத்தில் இன்ஜினியரிங் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதற்கான கவுன்சிலிங்கில் பங்கேற்க லட்சக்கணக்கான மாணவர்கள் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு ஆன்லைன் கவுன்சிலிங் குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் தீர்வு அளிக்கும் வகையில் தினமலர் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி முன்கூட்டியே நடத்தப்படுகிறது.மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் நடக்கும் இந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடைமுறைகள் தலைப்பில் சென்னை அண்ணா பல்கலை மாணவர் சேர்க்கை முன்னாள் இயக்குநர் நாகராஜன், வாய்ப்புகள் மிகுந்த இன்ஜினியரிங் பிரிவுகள் என்ற தலைப்பில் கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ்காந்தி ஆகியோர் பேசுகின்றனர். இதில் ஆன்லைன் கவுன்சிலிங் நடைமுறை என்ன, கோர் இன்ஜினியரிங் படிப்புகளுக்கான வாய்ப்புகள் எவ்வாறு உள்ளன, வாய்ப்புகள் மிகுந்த இன்ஜினியரிங் துறைகள் எவை, என்ன கட்ஆப் க்கு எந்த கல்லுாரி சாத்தியம், சரியான சாய்ஸ் பில்லிங் ஏன் அவசியம் போன்ற மாணவர்கள், பெற்றோருக்கு ஏற்படும் அனைத்து சந்தேகங்களுக்கும் நிபுணர்கள் நேரடி விளக்கம் அளிக்க உள்ளனர்.மாணவர்கள் பங்கேற்க www.kalvimalar.com அல்லது 91505 74441 ல் முன்பதிவு செய்யலாம். அனுமதி இலவசம். இந்நிகழ்ச்சியை கற்பகம் இன்ஸ்டிடியூஷன்ஸ் இணைந்து வழங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்