உள்ளூர் செய்திகள்

ஆல்வின் மெமோரியல் பள்ளி பிளஸ் 2வில் 100 சதவீதம் தேர்ச்சி

சேலையூர்: சேலையூரில் உள்ள ஆல்வின் மெமோரியல் சி.பி.எஸ்.இ., பள்ளியில், பிளஸ் 2 தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவியரும் முழு தேர்ச்சி பெற்றுள்ளனர்.இதில், வர்த்தகப் பிரிவு மாணவி பிரிஷா 500க்கு 490 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். விபின் மதிவேலன் 486 மதிப்பெண், சஹானா பாலாஜி 485 மதிப்பெண் என, முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்துள்ளனர். மேலும் பல்வேறு பாடங்களில் மொத்தம் 13 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர்.மாணவர்கள் தேர்ச்சி குறித்து பள்ளி நிர்வாகத்தினர் கூறியதாவது:இந்தாண்டு சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, 'ஆன்லைன்' வாயிலாக மேற்கொள்ளப்பட்டது. வழக்கமாக, எழுதுகோல் வைத்து விடைத்தாள் திருத்தும் போது, அடிப்படை மாற்றம் இல்லாமல் மாணவர்கள் விடை எழுதி இருந்தால் முழு மதிப்பெண் தருவது வழக்கம். ஆனால் இந்தாண்டு, மாணவர்கள் சுயமாக யோசித்து, வினாக்களுக்கு பதில் எழுதும் வகையில் சில பகுதிகள் இடம் பெற்றிருந்தன.இதனால், தேசிய மற்றும் மாநில அளவில் சி.பி.எஸ்.இ., தேர்ச்சி சதவீதத்தில் சரிவு காணப்பட்டாலும், சேலையூர் ஆல்வின் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.மாணவர்கள் பலர், டியூஷன் மற்றும் கோச்சிங் இல்லாமலே ஐ.ஐ.டி., ஜெ.இ.இ., நுழைவுத் தேர்வுகளில் 99.5 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்