உள்ளூர் செய்திகள்

கோவை அரசு கலைக் கல்லுாரியில் 2014-15ம் கல்வியாண்டுக்கான விளையாட்டு போட்டிகள்

கோவை: கோவை அரசு கலைக் கல்லுாரியில், 2014-15ம் கல்வியாண்டுக்கான விளையாட்டு போட்டிகள் வரும் 30ம் தேதி துவங்குகிறது. கோவை அரசு கலைக் கல்லுாரியில், ஆண்டுதோறும் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். 2014-15ம் கல்வியாண்டுக்கான விளையாட்டு போட்டிகள், வரும் 30ம் தேதி துவங்குகிறது. கால்பந்து போட்டி, வரும் 30, 31ம் தேதிகளில் மதியம் 2.00 மணிக்கும், வாலிபால் போட்டி - ஜன., 5, 6ம் தேதிகளில் மதியம் 2.00 மணிக்கு நடக்கிறது. தொடர்ந்து, கபடி ஜன.,7, 8ம் தேதி மதியம் 2.00 மணிக்கும், 9ம் தேதி மதியம் 2.00 மணிக்கு கோ-கோ போட்டியும் இடம் பெறுகிறது. அதேபோல், ஜன., 19ம் தேதி காலை 10.30 மணிக்கு சதுரங்கம் மற்றும் கூடைப்பந்து போட்டியும், 20ம் தேதி மதியம் பூப்பந்து போட்டியும், 21ம் தேதி ஹாக்கி போட்டியும் நடக்கிறது. ஜன., 21 - 23ம் தேதி வரை காலை 8.30 மணிக்கு கிரிக்கெட்டி போட்டி நடக்கிறது. அதையடுத்து, 27ம் தேதி மென்பந்து போட்டி மதியம் 2.00 மணிக்கும், 28ம் தேதி மதியம் 2.00 மணிக்கு கைப்பந்து போட்டியும் நடக்கிறது. இறுதியாக, பிப்., 2 மற்றும் 5ம் தேதிகளில் தடகள போட்டிகள் இடம்பெறுகிறது. விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், அனைவரும் தங்களை தயார்படுத்திக்கொள்வதுடன், தக்க சீருடையில் வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்